Thursday, 1 April 2010

தக்காளி தோசை - Tomato Dosai (in Tamil)

தேவையான பொருட்கள்

  1. புழுங்கல் அரிசி : 1/2  கிலோ
  2. பச்சரிசி : 100 கிராம் 
  3. மிளகாய் வற்றல் : காரத்திற்கேற்ப 
  4. சிறிய வெங்காயம் : 1/4 கிலோ 
  5. பச்சை மிளகாய் : 5 
  6. இஞ்சி : ஒரு சிறிய துண்டு 
  7. பூண்டு : 15 பற்கள்
  8. தக்காளிப் பழம் : 1/2 கிலோ 
  9. கருவேப்பிலை : சிறிதளவு 
  10. கொத்தமல்லி : சிறிதளவு 
  11. உப்பு : தேவைக்கேற்ப 
  12. கெட்டி தயிர் : 1/2 லிட்டர்
  13. பெரிய வெங்காயம் : 1/4 கிலோ 
  14. கடுகு : ஒரு ஸ்பூன் (தாளிக்க)
  15. கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு : தலா ஒரு ஸ்பூன் (தாளிக்க) 
  16. எண்ணெய் : 1/4 லிட்டர் 
செய்முறை
  • புழுங்கல் அரிசி, பச்சை அரிச இரண்டையும் சேர்த்து ஊறவைத்து அத்துடன் இஞ்சி, பூண்டு, மிளகாய் வற்றல் சேர்த்து அரைக்கவும். 
  •  
  • முக்கால் பதம் வந்ததும் தக்காளியை நறுக்கி மாவுடன் கலந்து அரைத்து உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
  •  
  • பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் இவற்றை கடுகு, உளுந்து கடலைப் பருப்புடன் 5 ஸ்பூன் எண்ணெய் விட்டுத் தாளித்து மாவுடன் கலந்து கொள்ளவும்.
  •  
  • பிறகு பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், கொத்தமல்லி, கருவேப்பிலை, தயிர் ஆகியவற்றை மாவுடன் சேர்த்து கலக்கவும்.
  •  
  • எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து தோசையாக வார்க்கவும். மெல்லிய தோசையாக வார்த்து 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு சிவந்தவுடன் திருப்பவும.
  •  
  • அரைத்தவுடன் உடனே செய்து சுவையாக திடீர் விருந்தினர்களுக்கு கொடுத்து மகிழ சுவையான தக்காளி தோசை ரெடி.
  •  

    பாதாம் அல்வா (Baadam Halwa)

    தேவையான பொருட்கள் :

    1. பாதாம் பருப்பு : 700 கிராம் 
    2. சக்கரை              :   300 கிராம்
    3. நெய்                    :    175 கிராம்
    4. குங்குமப்பூ       :  சிறிதளவு

    செய்முறை

    • பாதாம் பருப்பைச் சற்று சூடான தண்ணீரில் போட்டுத் தோலை அகற்றவும்.
    • சிறிது பாலைத் தெளித்துப் பருப்பை மசிய அரைக்கவும்.
    • குங்குமப்பூவைச் சிறிது பாலில் நனைத்து வைக்கவும்.
    • களிம்பேறாத ஒரு பாத்திரத்தில் முக்கால் ஆழாக்குத் தண்ணீர் விட்டுச் சக்கரையைப் போட்டு நிதானமாய் எரியக்கூடிய அடுப்பில் வைக்கவும்.
    • கம்பிப்பாகு ஆனவுடன் பாதாம் விழுதைச் சேர்த்து பாத்திரத்தில் ஒட்டாமல் கிளறவும் .
    • அல்வா லேகியப்பதம் ஆனப்பின், நெய், குங்குமப்பூ  இரண்டையும் சேர்த்து நன்றாகக் கிளறி அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.
    • மிகவும் கெட்டியாய்க் கிளறினால் அல்வா பர்பி ஆகிவிடும். மற்ற அல்வா வகைகளைப் போல் துண்டு செய்யாமல் பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.  தேவையான பொழுது அல்வாவைச் சிறிது சூடாக்கி உபயோகப்படுத்தவும்.

    Monday, 29 March 2010

    பால் பர்பி(milk candy)

    தேவையான பொருட்கள்
    1. பால் : 1/2 ஆழாக்கு
    2. வெண்ணெய் : 2 டேபிள் ஸ்பூன் 
    3. வெனிலா எசன்ஸ் : 4 துளிகள் 
    4. சர்க்கரை : 200 கிராம் 
    5. பாதாம் பருப்பு : 40 கிராம் 
    6. முந்திரிப் பருப்பு :40 கிராம் 
    7. தேங்காய் துருவல் : 40 கிராம் 
    செய்முறை
    • பாதாம் பருப்பைச் சற்று சூடான தண்ணீரில் நனைத்து வைத்து தோலை அகற்றவும்.

    • முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு, தேங்காய் துருவல் மூன்றையும் வெண்ணைப் போல் அரைக்கவும்.

    • அரைத்த விழுதைப் பாலில் கலந்து சர்க்கரையைச் சேர்த்து ஒரு வாணலியில் விட்டு நிதானமாய் எரியக்கூடிய அடுப்பில் வைத்து அடிக்கடி கிளறவும்.

    • பர்பி பக்குவம் சற்று கெட்டியானப்பின், எசன்ஸ், வெண்ணெய் இரண்டையும் சேர்த்துப் பாத்திரதில் பிடிக்காமல் கிளறி, பர்பி பாத்திரத்தில் ஒட்டாமல், பூத்து வரும் பொழுது அடுப்பிலிருந்து இறக்கவும்

    • பிறகு நெய் தடவிய தாம்பாளத்தில் கொட்டிச் சமமாய் பரத்திச் சூடு ஆறினபின் சற்றுக் கனமாய்த் துண்டுகள் செய்யவும்.

    Sunday, 28 March 2010

    மாம்பழப் பாயசம்

    தேவையானப் பொருட்கள்
    1. இனிப்புள்ள மாம்பழம் : 1 
    2. பால் : 200 மி.லி 
    3. சர்க்கரை : 200 கிராம்
    4. முந்திரிப் பருப்பு : 6 
    5. திராட்சை : 2  டேபிள் ஸ்பூன் 
    6. குங்குமப்பூ : சிறிதளவு 
    செய்முறை
    • மாம்பழத்தை அலம்பி, ஆவியில் வேகவைக்கவும்.
    • சூடு ஆறின பின்பு தோல், கொட்டை ஆகியவற்றை அகற்றி, சர்க்கரையைச் சேர்த்து  பாத்திரத்தில் போட்டுக் கரி அடுப்பில் வைத்து, அடிப் பிடிக்காமல் கிளறவும்.
    • முந்திரிப் பருப்பைச் சிறிய துண்டுகள் செய்து நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.
    • குங்குமப்பூவை மாம்பழத்துடன் சேர்க்கவும்.
    • திராட்சைப் பழத்தை அலம்பிக் கரண்டியினால் மசித்துப் பாலில் கலந்து கொள்ளவும்
    • பாயசம் சற்றுக் கெட்டியானவுடன் தீயிலிருந்து இறக்கி விடவும்.
    • பாலைக் காய்ச்சிச் சூடு ஆறின பிறகு, பாயசத்தில் சேர்த்து உபயோகப்படுத்தவும்
    • வறுத்த முந்திரிப் பருப்பையும் பாயசத்தில்  சேர்க்கவும்.
    • சுவையான மாம்பழப் பாயசம் தயார்.

    கடலைப் பருப்புப் பாயசம்


    தேவையான பொருட்கள் 

    1. அரிசி : 100 கிராம் 
    2. கடலைப் பருப்பு : 150 கிராம்
    3. தூள் செய்த வெல்லம் : 250 கிராம்  
    4. தேங்காய் :1/4 முடி 
    5. பால் : 1/4 லிட்டர் 
    6. ஏலக்காய் : 3
    7. நெய் : 2 டேபிள் ஸ்பூன் 
    செய்முறை  

    • ஆரிசி, கடலைப்பருப்பு இரண்டையும் தண்ணீரில் போட்டுக் களைந்து , தண்ணீர் வடித்த பின் நிழலில் உலர்த்தவும்

    • தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும்

    • வாணலியில் சிறிது நெய் விட்டு நிதானமாய் எரியக்க் கூடிய அடுப்பில் வைத்து நெய் காய்ந்தபின் முதலில் தேங்காய்த் துருவலைப் பொன் நிறமாய் வறுத்துக் கொண்டு அரிசி, பருப்பைச் சற்று வருது எடுக்கவும். ஏலக்காயைப் பொடி செய்யவும்.

    • களிம்பேறாத பாத்திரத்தில் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்துக் கொதிக்கும்   பொழுது, அரிசி பருப்பைப் போட்டு நன்றாக வேகவைக்கவும்.

    • பின்பு வெல்லத்தூளைச் சேர்த்து கொதித்தபின், பால், ஏலப்பொடி, வறுத்த தேங்காய்  துருவல் முதலியவற்றைப் பாத்திரத்தில் சேர்த்து உபயோகப்படுத்தவும்.
     

    Monday, 4 January 2010

    Tamil Recipe: மாங்காய் சாதம் (MANGO RICE ) செய்வது எப்படி?

    மாங்காய் தமிழ்நாட்டின் ஒரு முக்கியமான கனிவகை ஆகும்.   மாபிஞ்சு அல்லது மாவடு, மாங்காய், மாம்பழம் போன்றவை எல்லோரும் விரும்பி சாப்பிடும் ஒரு பொருளாக இருக்கிறது. 

    நமது உணவில் மாங்காய் ஊறுகாய், தொக்கு, மாவடு போன்றவற்றை உபயோகிப்பது வழக்கம்.  ஆனால் மாங்காய் சமையலில் கூட உபயோகிக்கலாம்.  குறிப்பாக, மாங்காய் பருப்பு, மாங்காய் சாதம், போன்றவை மிகவும் சுவையாக இருக்கும்.  முக்கியமாக, கர்பிணிப்பெண்கள் இதை விரும்பி சாப்பிடுவர்.  

    இப்போது மாங்காய் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:
    1. பச்சை அரிசி                :   1 / 2 கிலோ (அ) 500 கிராம்
    2. மாங்காய் துருவல்   :  125 கிராம்
    3. தேங்காய் துருவல்  :  75 கிராம்
    4. உப்பு  - தேவையக்கேற்ப
    5. மஞ்சப்பொடி - 1 டீஸ்பூன்
    6. நல்லெண்ணெய் : 100  கிராம் 
    7. முந்திரி   பருப்பு : 15 கிராம்
    8. பெருங்கயத்தூள் : 1 டீஸ்பூன்
    செய்முறை

    • அரிசியை சாதமாக வடித்து தாம்பாளத்தில்  போட்டுக்கொள்ளவும். 
    • சாதம் ஆறிய பின் மாங்காய் துருவலை  அதில் போடவும் 
    • கடுகு, மிளகாய், தேங்காய் துருவல், உப்பு, மஞ்சள்பொடி, ஆகியவற்றை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து வெண்ணை போல் அரைத்து சாதத்தில் போட்டு நன்றாக கலந்து வைக்கவும்.
    • பிறகு நல்லெண்ணெயை வாணலியில் விட்டுக் காயவைத்து, கடுகு முந்திரிப்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்ப்பருப்பு, பெருங்கயப்பொடி, ஆகியவற்றை சேர்த்து தாளித்தபின்  இதனை சாத்தில் கொட்டி நன்றாக கலந்து விடவும்.
    • சிறிது நேரம் கழித்து ஆறிய பின் எடுத்து பரிமாறவும்