தேவையான பொருட்கள்
- அரிசி : 100 கிராம்
- கடலைப் பருப்பு : 150 கிராம்
- தூள் செய்த வெல்லம் : 250 கிராம்
- தேங்காய் :1/4 முடி
- பால் : 1/4 லிட்டர்
- ஏலக்காய் : 3
- நெய் : 2 டேபிள் ஸ்பூன்
- ஆரிசி, கடலைப்பருப்பு இரண்டையும் தண்ணீரில் போட்டுக் களைந்து , தண்ணீர் வடித்த பின் நிழலில் உலர்த்தவும்
- தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும்
- வாணலியில் சிறிது நெய் விட்டு நிதானமாய் எரியக்க் கூடிய அடுப்பில் வைத்து நெய் காய்ந்தபின் முதலில் தேங்காய்த் துருவலைப் பொன் நிறமாய் வறுத்துக் கொண்டு அரிசி, பருப்பைச் சற்று வருது எடுக்கவும். ஏலக்காயைப் பொடி செய்யவும்.
- களிம்பேறாத பாத்திரத்தில் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்துக் கொதிக்கும் பொழுது, அரிசி பருப்பைப் போட்டு நன்றாக வேகவைக்கவும்.
- பின்பு வெல்லத்தூளைச் சேர்த்து கொதித்தபின், பால், ஏலப்பொடி, வறுத்த தேங்காய் துருவல் முதலியவற்றைப் பாத்திரத்தில் சேர்த்து உபயோகப்படுத்தவும்.