நமது உணவில் மாங்காய் ஊறுகாய், தொக்கு, மாவடு போன்றவற்றை உபயோகிப்பது வழக்கம். ஆனால் மாங்காய் சமையலில் கூட உபயோகிக்கலாம். குறிப்பாக, மாங்காய் பருப்பு, மாங்காய் சாதம், போன்றவை மிகவும் சுவையாக இருக்கும். முக்கியமாக, கர்பிணிப்பெண்கள் இதை விரும்பி சாப்பிடுவர்.
இப்போது மாங்காய் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
- பச்சை அரிசி : 1 / 2 கிலோ (அ) 500 கிராம்
- மாங்காய் துருவல் : 125 கிராம்
- தேங்காய் துருவல் : 75 கிராம்
- உப்பு - தேவையக்கேற்ப
- மஞ்சப்பொடி - 1 டீஸ்பூன்
- நல்லெண்ணெய் : 100 கிராம்
- முந்திரி பருப்பு : 15 கிராம்
- பெருங்கயத்தூள் : 1 டீஸ்பூன்
- அரிசியை சாதமாக வடித்து தாம்பாளத்தில் போட்டுக்கொள்ளவும்.
- சாதம் ஆறிய பின் மாங்காய் துருவலை அதில் போடவும்
- கடுகு, மிளகாய், தேங்காய் துருவல், உப்பு, மஞ்சள்பொடி, ஆகியவற்றை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து வெண்ணை போல் அரைத்து சாதத்தில் போட்டு நன்றாக கலந்து வைக்கவும்.
- பிறகு நல்லெண்ணெயை வாணலியில் விட்டுக் காயவைத்து, கடுகு முந்திரிப்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்ப்பருப்பு, பெருங்கயப்பொடி, ஆகியவற்றை சேர்த்து தாளித்தபின் இதனை சாத்தில் கொட்டி நன்றாக கலந்து விடவும்.
- சிறிது நேரம் கழித்து ஆறிய பின் எடுத்து பரிமாறவும்