skip to main |
skip to sidebar
தேவையானப் பொருட்கள்
- இனிப்புள்ள மாம்பழம் : 1
- பால் : 200 மி.லி
- சர்க்கரை : 200 கிராம்
- முந்திரிப் பருப்பு : 6
- திராட்சை : 2 டேபிள் ஸ்பூன்
- குங்குமப்பூ : சிறிதளவு
செய்முறை
- மாம்பழத்தை அலம்பி, ஆவியில் வேகவைக்கவும்.
- சூடு ஆறின பின்பு தோல், கொட்டை ஆகியவற்றை அகற்றி, சர்க்கரையைச் சேர்த்து பாத்திரத்தில் போட்டுக் கரி அடுப்பில் வைத்து, அடிப் பிடிக்காமல் கிளறவும்.
- முந்திரிப் பருப்பைச் சிறிய துண்டுகள் செய்து நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.
- குங்குமப்பூவை மாம்பழத்துடன் சேர்க்கவும்.
- திராட்சைப் பழத்தை அலம்பிக் கரண்டியினால் மசித்துப் பாலில் கலந்து கொள்ளவும்
- பாயசம் சற்றுக் கெட்டியானவுடன் தீயிலிருந்து இறக்கி விடவும்.
- பாலைக் காய்ச்சிச் சூடு ஆறின பிறகு, பாயசத்தில் சேர்த்து உபயோகப்படுத்தவும்
- வறுத்த முந்திரிப் பருப்பையும் பாயசத்தில் சேர்க்கவும்.
- சுவையான மாம்பழப் பாயசம் தயார்.